Baby Day Care-ல் நடந்த அதிர்ச்சி - குழந்தையை கதற கதற குப்பை தொட்டியில் போட்டு அட்டூழியம்
தேனியில் பிளாஸ்டிக் குப்பை தொட்டியில் குழந்தையை அமரவைத்து விளையாடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சிதம்பரனார் தெரு பகுதியில் தனியார் பகல் நேர குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பணியாற்றும் இரண்டு சிறுமிகள், குழந்தை ஒன்றை பிளாஸ்டிக் குப்பை தொட்டியில் அமரவைத்து உருட்டி விளையாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தகுந்த பணியாட்களை நியமிக்காமல், சிறுமிகளை பணிக்கு வைத்த தனியார் பகல்நேர காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி தற்போது புகார் எழுந்துள்ளது.