நெருங்கி வரும் பொங்கல் பண்டிகை - மண்பானை தயாரிப்பு பணிகள் தீவிரம்

Update: 2025-01-05 12:13 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொழிஞ்சிபட்டியில் பொங்கல் பானை மற்றும் அடுத்தடுத்த மாதங்களில் வரும் கோயில் திருவிழாக்களுக்காக தீச்சட்டி, ஆயிரம்கண் பானை தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாகரீகம் வளர்ந்து வரும் நிலையில் மக்கள் பழமையை மறந்து மண்பாண்ட பொருட்களை பயன்படுத்த தவறி வருவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அதிக கெடுபிடி விதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். தங்களைப் போன்ற நலிந்த மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு கண்மாய்களில் மண் எடுத்துக் கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்