"எங்களுக்கு சந்தேகமா இருக்கு" குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் -பரபரப்பு பேட்டி
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட செப்பந்தோடு பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர். அங்குள்ள 8 பழங்குடியின குடும்பங்கள் அரசு கட்டி கொடுத்த 6 வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை என்றும் , தாங்கள் ஏமாற்றப்படுவதாகவும் பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.