யாரென்றே தெரியாதா 4 மாநில இன்ஸ்டா நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து டிராக்டரில் நாட்டை சுற்றும் சுவாரஸ்யம்!
இந்தியாவின் 4 மாநிலங்களை சேர்ந்த 6 பேர் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு, நாடு முழுவதும் டிராக்டரில் சுற்றி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே டிராக்டர் ஒன்று, தேசிய கொடி கட்டப்பட்டு சாலையோரம் நின்றிருந்தது. அதில் ஒரு பெண், ஒரு சிறுமி உட்பட 6 பேர் பயணம் செய்து வந்தது தெரியவந்தது. அந்த 6 பேருமே ஒரே மாநிலமோ ஒரே ஊரையோ சேர்ந்தவர்கள் அல்ல... அவர்கள் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும் இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு ஊராக சென்று வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்ததும், அதன்மூலம் வெவ்வெறு இடங்களில் அறிமுகமாகி, தற்போது ஒரே டிராக்டரில் 6 பேரும் சேர்ந்து நாடு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு பயணித்து வருகின்றனர். தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்வதாக தெரிவித்தனர். யாரென்றே தெரியாமல் 6 பேர் ஆங்காங்கே சந்தித்து, நண்பர்களாகி சேர்ந்து பயணிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.