லிஃப்ட் கேட்டு ஏறியவர்... லாரி மோதி... தலை நசுங்கி பரிதாப பலி... சென்னை அருகே அதிர்ச்சி
லிஃப்ட் கேட்டு வந்தவர் லாரி மோதி உயிரிழந்த சோக சம்பவம் திருவள்ளூரில் நிகழ்ந்துள்ளது. லோடு மேனாக பணியாற்றி வரும் செங்குன்றம் பவானி நகரைச் சேர்ந்த 50 வயது முனியாண்டி, பிரசன்னா என்பவர் ஓட்டி வந்த மினி லோடு வண்டியில் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது கன்டெய்னர் லாரி ஒன்று அந்த மினி லோடு வண்டியின் மீது மோதுவது போல் சென்றதால் பிரசன்னா இடது புறமாக வண்டியைத் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த லோடு வாகனம் திருமழிசையிலிருந்து மாதவரம் நோக்கி சென்ற மினி லாரி மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானது. லோடு வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், முனியாண்டி தலை நசுங்கி உயிரிழந்தார். பிரசன்னா நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.