சிதம்பரத்தை சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன் உலகிலேயே மிகச்சிறிய தங்கத்தேரை செய்து அசத்தியுள்ளார். சிதம்பரம் கீழ ரத வீதியில் பாரம்பரிய நகை தொழில் செய்யும் பொற்கொல்லர் முத்துக்குமரன் 30 மில்லிகிராம் தங்கத்தால் மிகச் சிறிய சொர்ண லிங்கத்தையும் 900 மில்லிகிராம் தங்கத்தால் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரையும் செய்துள்ளார். மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் மற்றும் தரிசனம் நடைபெற உள்ள நிலையில் இந்த தங்கத்தேரை செய்ததாக அவர் கூறினார்.