திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். கனிமொழிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் கனிமொழி எம்.பி. மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில், 100 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். கனிமொழியின் பிறந்தநாளையொட்டி, X தளத்தில் ஹேப்பி பர்த்டே கனிமொழி கருணாநிதி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே அய்யா கைத்தடியோடு, அரியணை நோக்கி வருகிறார் என திமுக மகளிர் அணி வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளது....