பொள்ளாச்சியில் பலியான 2 வட மாநில தொழிலாளர்கள் - உடனே 3 பேர் மீது பாய்ந்த வழக்கு
பொள்ளாச்சி அருகே நெகமம் காணியாலாம் பாளையத்தில் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 60 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட சுவர்களுக்கு இடையே மணல் தள்ளப்பட்ட போது அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ரெகேசன் , சனார்மான்ஜி ஆகியோர் மீது மதில் சுவர் விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இது தொடர்பாக கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்து வந்த காண்ட்ராக்டர் பிமல்ஜித்கிங் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.