சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் வீடு.. தலைவர்கள் கண்டனம்

Update: 2025-03-25 01:54 GMT

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சவுக்கு சங்கர் வீட்டில் வன்முறையை ஏவிவிட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். விமர்சனம் செய்தவரின் வயது முதிர்ந்த தாய் வசிக்கும் இடத்தில் அராஜகம் செய்யப்பட்டுள்ளதை த.வெ.க வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார். திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளதாக விசிக கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்