"1500 கி.மீ-க்கு அங்குட்டு போட்ருக்காங்க.." தேர்வுக்கு காத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி - செய்வதறியாது திணறும் இளைஞர்கள்
ரயில்வே மூலம் நடத்தப்படும் துணை லோக்கோ பைலட் பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவிகிதம் பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நபர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், 1000 கிலோ மீட்டர் தாண்டி வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் தமிழகத்தில் தேர்வு மையத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.