ரத்த வெள்ளத்தில் பர்த்டே பாய்.. அடுத்து நடந்த கொடூரம்.. துடிதுடித்து நின்ற உயிர்

Update: 2025-03-17 03:32 GMT

கரூரில், நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை செய்யப்பட்டார். சணப்பிரட்டியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான சந்தோஷ் குமார் வீட்டில், அவரது நண்பர் பிரகாஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில், பிரகாஷின் தலையில் பாட்டிலால் சந்தோஷ் குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனை சென்று திரும்பிய போது, தொழிற்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை, நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக தெரிகிறது. இதில், சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் உயிரிழந்ததையடுத்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்