தனியார் தேயிலை தோட்டத்தில் 8 மாத பெண் சிறுத்தை உயிரிழப்பு

x

நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூரில், தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் நோய் பாதிக்கப்பட்டதால் சிறுத்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2 மாதத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 3-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்