மகனை கடத்தி ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டிய ஓட்டுநர் - தட்டி தூக்கிய போலீஸ்
கோவையில் தொழிலதிபரின் 11 வயது மகனை கடத்தி 12 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். துடியலூரைச் சேர்ந்த ஸ்ரீதர் சூர்யகுமார் என்பவரிடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த நவீன், ஸ்ரீதரின் 11 வயது மகனை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீதர் சூர்யகுமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பவானி பகுதியில் பதுங்கியிருந்த நவீனை கைது செய்து, சிறுவனை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, நவீனிடம் இருந்து 12 லட்ச ரூபாயை வாங்கிய ஸ்ரீதர் சூர்யகுமார், அதை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியதால் சிறுவனை கடத்தியதாக தெரிவித்தார்.