மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழப்பு

x

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே, மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் என்பவர் பூசாரிபாளையத்தில் உள்ள மின்சார கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்