``ஞானசேகரன் பின்னணியில்..'' - பாஜக முக்கிய புள்ளி பரபரப்பு குற்றச்சாட்டு
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக டெல்லியில் பாஜக மூத்த தலைவர் ராஜிவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினார். மாணவி பலாத்கார வழக்கில் பொது மக்கள் கோபம் காரணமாகவே ஞானசேகரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார் எனவும் அவருக்கு திமுக உயர்மட்ட தலைவர்களுடன் நெருக்கம் இருப்பது வெளிச்சமாகிவிட்டது எனவும் குறிப்பிட்டார். இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் இந்த அக்கிரமம் நடக்கிறது; இத்தகைய குற்றவாளிகளுக்கு திமுகவின் பாதுகாப்பு உள்ளது எனவும் குற்றம் சாட்டினார். பாஜக மட்டும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க போராடுவதாகவும், மற்ற கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சாட்டிய அவர், சம்பவத்தை கண்டித்து போராடிய பாஜக மகளிர் அணியினரை கைது செய்தது, அரசியலமைப்பை மீறிய செயல் என விமர்சித்தார்.