இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. காய்கறிகள் விலை சரசரவென சரிவு.. | Vegetable Price

Update: 2025-01-05 14:27 GMT

மற்றும் பருவமழை பொழிவு குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் காய்கறிகள் விலை 20 முதல் 50 ரூபாய் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் விலை 60 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் தக்காளி விலை 30 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் குறைந்துள்ளது. முருங்கைக்காய் விலை 200 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் விலை 100 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதேபோல் ஒரு கிலோ வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும் கத்திரிக்காய் 45 ரூபாய்க்கும் பட்டாணி 50 ரூபாய்க்கும் குடைமிளகாய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்