பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - குலை நடுங்க வைக்கும் காட்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மேல்மருவத்தூர் சென்று விட்டு திரும்பி வந்தவர்களின் பேருந்து விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சத்திரம் அருகே நவனி பள்ளிப்பட்டி, ஓலப்பாளையத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். தோட்டக்கூர் பட்டி அருகே பேருந்தானது அதிவேகமாக சென்ற நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வளைவில் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்த நிலையில், ஒரு பெண் மட்டும் பலத்த காயம் அடைந்தார். நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். இவ்விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்... பக்தர்களின் வீடுகளில் இருந்து வெறும் இரண்டே கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.