ஊட்டியில் வளர்ப்பு நாயை, சிறுத்தை புலி வேட்டையாடிய சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி வண்டிசோலை குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலை புகுந்த சிறுத்தை புலி, நாயை வேட்டையாடி இழுத்துச் சென்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.