கார் மோதி பசுமாடு கன்றுடன் உயிரிழப்பு
சென்னை காமராஜர் சாலையில் நேற்றிரவு அதிவேகமாக சென்ற கார் மோதி பசுமாடு வயிற்றில் இருந்த கன்றுடன் பரிதாபமாக உயிரிழந்தது. விபத்துக்குள்ளான கார் அரசு மருத்துவ துறைக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். துடிதுடித்த பசுமாட்டிற்கு சிகிச்சை அளிக்க ப்ளூ கிராஸ் உள்ளிட்ட அமைப்புகளை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் , மனிதர்களை போல் கால்நடைகளுக்கும் 24 மணி நேர மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story