டீன் ஏஜர்களே குறி.. ஜோடியாக பாலியல் தொழில்.. 8 வருஷ ஆட்டம் முடிந்தது

Update: 2025-03-20 03:33 GMT

கடலூர் அருகே பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தம்பதியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 14 மற்றும் 13 வயது பள்ளி மாணவிகளை கடத்திய சதீஷ்குமார் - தமிழரசி தம்பதி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் ஏற்கெனவே 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கணவன் மனைவிகளான சதீஷ்குமார் மற்றும் தமிழரசி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சதீஷ்குமார் கோவையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி திருவண்ணாமலையில் இருந்த தமிழரசியையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்