கத்தி முனையில் கடத்தப்பட்ட வக்கீல்.. முன்னாள் ராணுவ வீரர் கைது - இது காரணமா?
மதுரையில், வழக்கறிஞரை கத்தி முனையில் காரில் கடத்தி சென்ற சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்வேலை கடத்தியதாக அவரது பெரியம்மா மகனான ராஜ்குமார், மதுரையை சேர்ந்த மாரிமுத்து, ஸ்ரீகாந்த், கௌதம் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், 5 லட்சம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் உறவினர் மூலமாக வழக்கறிஞரான செந்தில்வேல் கடத்தப்பட்டார் என்பது தெரியவந்தது.