``மீண்டும் பள்ளிக்கு போகலாம்'' - தள்ளாடும் வயதில் படித்த பள்ளிக்கு மீண்டும் வந்த முன்னாள் மாணவர்கள்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நூற்றாண்டு விழா, ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 75 ஆண்டுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்று மகிழ்ந்தனர். தள்ளாடும் வயதில் மீண்டும் பள்ளி செல்லும் சிறு குழந்தை போல் அவர்கள் ஆரம்பக் கல்வி கற்றது காண்போரை நெகிழச் செய்தது.