பேக்கரிக்குள் புகுந்து தின்பண்டங்களை ருசித்து சாப்பிட்ட கரடி - வைரலாகும் வீடியோ
உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியில் சமீப நாட்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி சத்தம் இன்றி மெதுவாக குடியிருப்பு பகுதிகளில் இருந்த பேக்கரியின் கதவை கால்களால் தள்ளி திறந்தது. பேக்கரிக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த தின்பண்டங்களை ருசித்து பார்த்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story