கிரிக்கெட் போட்டிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு வேறுவிளையாட்டுப் போட்டிகளுக்கு கிடைப்பதில்லை என்று பாரா ஒலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் வேதனை தெரிவித்துள்ளார். சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தடகள விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், கிரிக்கெட் போன்று அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் சரிசமமான ஆதரவு கொடுக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.