தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக டீ மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் என்பவர் சிறுமி ஒருவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடியதால், தகவலறிந்து வந்த போலீசார், தப்ப ஓட முயன்ற முகம்மது இஸ்மாயிலை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.