ஈஷா அறக்கட்டளையின் தகன மண்டபம் - அரசு பதிலளிக்க உத்தரவு

Update: 2025-03-22 05:37 GMT

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன ? என்பது குறித்து தெரிவிக்க இறுதி அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகன மேடை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசு, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்