மிகவும் பணக்கார முதல்வர் யார்? மிகவும் ஏழையான முதல்வர் யார்? - இந்தியாவை சர்ப்ரைஸாக்கிய ரிப்போர்ட்
இந்தியாவில் மிகவும் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், மிகவும் ஏழை முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார்.
31 மாநில முதல்வர் தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்ப்பித்துள்ள தகவல்களை ஒருங்கிணைத்து, பணக்கார முதல்வர்கள், ஏழை முதல்வர்கள் பட்டியலை தனியார் அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
அதன்படி இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ஆயிரத்து 630 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
931 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவிலேயே மிகவும் பணக்கார முதல்வராக ஆந்திரா முதல்வர்சந்திரபாபு நாயுடு உள்ளார்.
இரண்டாவது இடத்தில் 332 கோடி ரூாய் சொத்து மதிப்புகளுடன் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளார்.
ரூ. 51 கோடி சொத்து மதிப்புடன் கர்நாடக முதல்வர் சித்தாராமய்யா இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ரூ.38 கோடி சொத்து மதிப்புகளுடன் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆறாவது இடத்திலும் ரூ.8 கோடி சொத்துக்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 14 வது இடத்தில் உள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா 15 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் ஏழை முதல்வர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா 55 லட்சம் சொத்துக்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் 1 கோடி ரூபாய் சொத்துக்களுடன் கேரள முதல்வர் பினராய் விஜயன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிக 89 கிரிமினல் வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன.