`விஷபுத்தி’ ஞானசேகரனின் மொத்த ஜாதகமும் அம்பலம் -பதறவைக்கும் தகவல்கள்..காத்திருக்கும் பெரிய திருப்பம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குறித்து பல பரபரப்பு தகவல் வெளியான நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் தனது மாணவியை வீடியோ எடுத்த பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் அவரை மிரட்டி வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக நேரிடையாக அண்ணா பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சார் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கையில் எடுத்த எதிர்க்கட்சியினர் என தொடர் குரலை எழுப்பி வருகின்றனர்.
கைதான ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரது இரு செல்போனை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் பல ஆபாச வீடியோ இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோக்களில் உள்ள பெண்கள் மாணவிகளா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலம் ஞானசேகரன் பயன்படுத்திய போனின் கால் ஹிஸ்டரியையும் வாட்ஸ் அப் சாட்களையும் எடுத்து வருகின்றனர்
இது ஒரு புறம் இருக்க பள்ளிக்கரணை போலீசார் கடந்த மூன்று மாதமாக ஞானசேகரனைத் தேடி கோட்டூர்புரம் வரை வந்த தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த நான்கு மாதமாக பள்ளிக்கரனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆளில்லாத வீடுகள் மற்றும் பெண்கள் மட்டும் தனியாக இருக்கக்கூடிய வீடுகள் ஆகியவற்றை நோட்டமிட்டுத் திருடி இருக்கிறார்.
சில வீடுகளில் உள்ள பெண்களிடம் ஞானசேகரன் அத்துமீறியதை வீடியோவாகவும் எடுத்து வைத்ததும் தெரியவந்து இருக்கிறது. மேலும் மேற்கண்ட சம்பவங்களில் விலையுயர்ந்த தார் காரில் சென்று ஞானசேகரன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.மேலும் கொள்ளையடித்த பணத்தில் ஞானசேகரன் பண்ணை வீடு வாங்கி இருப்பதும் தெரியவந்து இருக்கிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தார் காரை அடையாளம் கண்டு கோட்டூர்புரம் வரை வந்து இருக்கின்றனர். ஆனால் அதன் பின்பு அந்த கார் எங்கும் பதிவாகாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தான் கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரனைக் கைது செய்தது தெரியவந்து இருக்கிறது.
மேலும் பள்ளிகரனையில் திருட்டு சம்பத்தில் ஈடுபட்ட பின்னர் தான மாணவியை ஞானசேகரன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவி வன்கொடுமையில் சொல்லப்படும் சார் யார் என்பதும், ஞானசேகரன் கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்திய தார் கார் யாருடையது என்பதும் ஞானசேகரன் சொல்லப் போகும் பதில்கள் இந்த வழக்கில் அடுத்த பெரும் திருப்பமாக இருக்கும் என நம்பப்படுகிறது...