கருப்பு நிறத்தில் மாறிய திருச்செந்தூர் கடல் பக்தர்கள் பீதி..இது எதற்கான அறிகுறி | Thiruchendur
திருச்செந்தூர் கடல் கடந்த மூன்று தினங்களாக கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் நிலையில் பக்தர்கள் அச்சத்துடன் நீராடி வருகின்றனர். கடற்கரை பகுதிகளில் கருப்பு நிறம் படிந்த மணல்கள் ஆங்காங்கே கரை ஒதுங்கின. இதனால் கழிவுநீர் ஏதும் கடலில் கலக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுந்தது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததால் ஒரு வாரமாக கடலுக்குள் காற்றின் திசை மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.