தீ விபத்து நடந்த ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனரமைப்பு பணிகள் முடியாததால், நோயாளிகள் இன்னும் வார்டுகளுக்கு மாற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு, 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் 2 ,3 ,4 வது தளங்களில் இருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆங்காங்கே உள்ள பழைய கட்டிடங்களில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை இன்னும் வார்டுக்குள் மாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.