ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றவர் சக்கரத்தில் சிக்கி பலி
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் விரைவு ரயிலில், இருந்து இறங்கிய ஆந்திராவைச் சேர்ந்தவர், ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சக்திவேட்டை சேர்ந்த பாலாஜி என்பவர், கொரமண்டல் விரைவு ரயிலில் புறப்பட்டு சென்னை நோக்கி பாலாஜி வந்து கொண்டிருந்தார். அந்த ரயில், கவரப்பேட்டை ரயில் பிளாட்பாரம் 3 வழியாக கடந்து சென்றது. அப்போது ரயில் மெதுவாக செல்வதாக எண்ணிய பாலாஜி, இறங்க முயன்றார். அப்போது, சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story