சென்னை மெரினா கடற்கரையில் மணல் பரப்பில் உறங்கி கொண்டிருந்த இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் கடையில் வேலை பார்த்து விட்டு வந்த மெரினா கடற்கரை சுபாஷ் சந்திரபோஸ் சிலை பின்புறம் மணல் பரப்பில் படுத்து சாமுவேல் தூங்கி உள்ளார். அப்போது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 1250 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து, சாமுவேல் அளித்த புகாரின் பெயரில் மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.