12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - 10 வருடத்திற்கு பிறகு சிக்கிய குற்றவாளி
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவான நபரை, கேரளா விமான நிலையத்தில் கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். குற்றவாளி தனுஷ் குறித்து இந்திய குடியுரிமை அலுவலகத்தில் தகவல் கொடுத்து தனுஷை இந்தியா வரவழைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.