"இந்த இடத்திலா பேருந்து நிலையம்?" மக்கள் ஷாக்.. அமைச்சர் நேருவுக்கு கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்டநாட்களாக போராடி வந்த நிலையில், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். இதற்காக குப்பை கொட்டும் இடத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தை அரசு முறையாக கைப்பற்றி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்