``கொஞ்சம் மிஸ் ஆனாலும் உயிரே போயிடும்'' - இளைஞர்கள் செய்த அதிர்ச்சி செயல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசாரின் கண் முன்னே சோதனைச் சாவடி அருகில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வாகன ஓட்டிகளை பதறவைக்கும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசம் செய்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.