ராணுவத்தில் இறந்த தந்தை.. நானும் ஒரு சோல்ஜர்.. கண்ணீரோடு சல்யூட் செய்த மகன்
தந்தை இறந்த துக்கத்திலும், கண்ணீருடன் மகன் பொது தேர்வு எழுத சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் பரமசிவம். சத்தீஷ்கர் மாநில எல்லை பாதுகாப்பு படை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் சிவகாசிக்கு கொண்டுவரப்படாத நிலையில் கூட, பிளஸ் ஒன் படிக்கும் அவரது மூத்த மகன் தர்ஷன் அழுதபடியே பொதுத்தேர்வு எழுத சென்றான். முன்னதாக தனது தந்தையின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் தந்தையின் கனவை நிறைவேற்றி,தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற போவதாக கூறியது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.