சாராய வியாபாரிகளிடம் தொடர்பு - 5 காவலர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பி வைப்பு

Update: 2025-03-23 03:36 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் விஷச்சாராய வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கி விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மரக்காணத்தில் கடந்த 2023ம் ஆண்டு விஷச்சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணையில் சாராய வியாபாரிகளிடம் தொடர்பில் இருந்த 10 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 10 காவலர்களில் 5 காவலர்களுக்கு தற்போது கட்டாய ஓய்வு வழங்கி விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்