சென்னை அண்ணாநகரில் பூங்காவுக்கு விளையாட சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தனியார் நிறுவன காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிந்தா சார்கி என்பவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.