ரம்ஜான் சிறப்பு ரயில் - எங்கிருந்து எங்கு.. எந்த தேதிகளில் விவரங்கள் வெளியீடு
தாம்பரம் - கன்னியாகுமரி இடையே ரம்ஜான் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரம்ஜான் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மார்ச் 28ஆம் தேதி தாம்பரத்தில் இருந்தும், மார்ச் 31 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்தும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு மார்ச் 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கிறது. அதேபோல் மதுரை - தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன.