தகாத வார்த்தையில் திட்டிய அதிகாரி.. சுத்து போட்டு வெளுத்த மக்கள் - சேலத்தில் பரபரப்பு

Update: 2025-03-23 04:40 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, குடிநீர் கட்டணம் வசூலிக்க சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 10 வது வார்டு பகுதியில், 18 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், அவையும் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் வரி வசூலிக்க வந்த அதிகாரிகள் தகாத வார்த்தையில் பேசியதாக கூறி, பொதுமக்கள் அவர்களை சிறைபிடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்