ஈவிரக்கமில்லாத கோடை .. உடனடியாக போக்குவரத்து துறைக்கு மேலிடம் அனுப்பிய சுற்றறிக்கை

Update: 2025-03-23 03:27 GMT

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்து கூடுதல் தலைமை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், பேருந்து நிலையங்கள், நேரக்கண்காணிப்பாளர் அறை, ஓய்வு அறை உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவில் குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அனைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் OSR பொட்டலங்கள் வழங்க வேண்டும் என்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. ​​

Tags:    

மேலும் செய்திகள்