மொத்த உலகையும் திரும்பி பார்க்கவைத்த குகேஷ்..சென்னையில் கால் வைத்த நொடி சொன்ன வார்த்தை தான் ஹைலைட்டே

Update: 2024-12-16 12:12 GMT

சிங்கப்பூரில் 14 சுற்றுகளாக உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷும், சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரெனும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம், மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியனாகி 18 வயதே ஆன குகேஷ் வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் பெற்றோருடன் குகேஷ் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் குகேஷிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்