சென்னை அபிராமபுரம் பகுதியில் ஹெராயின் வைத்திருந்த 2 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 கிராம் ஹெராயின் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் இருவரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் சென்னையில் தங்கி வீட்டு வேலை செய்து கொண்டு, தரமணி பகுதியில் வெளி மாநிலத்திலிருந்து வாங்கி வரும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.