"இதற்கு மேல் முடியாது" நேராக வந்து NH ரோட்டை மறித்து உட்கார்ந்த மாணவிகள்

Update: 2025-03-28 03:35 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதியில் சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி விடுதி மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்