வெள்ளியங்கிரி வரும் பக்தர்களே.. நிலைமை புரியாம இப்படியெல்லாம் வீடியோ போடாதீங்க..
கோவை வெள்ளியங்கிரி மலையில் அனுமதியின்றி நடவு செய்யப்பட்ட அரசமர கன்றை வனப்பணியாளர்கள் அகற்றினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மலையேறிய பக்தர் ஒருவர் ஏழாவது மலை தொடங்கும் இடத்தில், ஒரு அரச மரக்கன்றை நடவு செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார். அங்கு நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஒவ்வாத மரங்களை நடுவதா? என பலரும் விமர்சித்திருந்த நிலையில், தற்போது அந்த மரக்கன்று அகற்றப்பட்டுள்ளது.