நிலம் யாருக்கு சொந்தம்? - பயங்கர தாக்குதல்
கொடைக்கானலில் நில பிரச்சினையில் ஒரு குடும்பத்தினரை 20க்கும் மேற்பட்டோர் பயங்கரமாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோக்கர்ஸ் வாக் அருகே சி.எஸ்.ஐ திருச்சபை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அந்த இடத்தில் வசித்து வருபவர்களை பாதிரியார் உடன் வந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
Next Story