7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது நபர் - அதிர்ந்து போன பெற்றோர்
திருப்பத்துரில் பேருந்துக்காக காத்திருந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 56 வயது கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்களாபுரம் பகுதியில் கோயிலில் கட்டுமான வேலை நடைபெற்று வரும் நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது, கட்டிட தொழிலாளி முனிரத்தினம் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் முனிரத்தினத்தின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.