பிரசவத்தின் போது கோமாவுக்கு சென்ற கர்ப்பிணி பரிதாப பலி

Update: 2025-03-28 03:36 GMT

ஆலங்குடியில் தவறான சிகிச்சை காரணமாக கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கொந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் இளமுருகன், தனுசுவள்ளி தம்பதி. இந்த நிலையில், ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனுசுவள்ளி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது வழங்கப்பட்ட சிகிச்சையில் கர்ப்பிணி தனுசுவள்ளி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தனியார் மருத்துவமனையின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்