கர்ப்பிணிக்கு உயிர்போக வந்த வயிற்றுவலி..வாழைப்பழம் சாப்பிட சொன்ன டாக்டர்..| Chennai
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் காமாட்சி. 24 வயதான இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஜனவரி 13ஆம் தேதி டெலிவரி தேதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், வயிறு உபாதை பிரச்சனைக்காக ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர்கள் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வாழைப்பழம் சாப்பிடுங்கள்... சரியாகிவிடும்... என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோவில் வீடு திரும்பிய அவருக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையின் தலை வெளியே வந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று கூறிவிட்டு, சிசுவை வெளியே எடுத்தனர். பின்னர் காமாட்சியை மீண்டும் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர். அங்கே அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தை உயிரிழந்ததற்கு அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.