WTC ஃபைனல்... வாழ்வா...சாவா போட்டி..! வாய்ப்பை இழந்து வெளியேறியது இந்தியா
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்தியா தக்கவைக்கும் நிலை இருந்தது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இந்தியா தவறவிட்டுள்ளது. அதே சமயம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா 2வது முறையாக முன்னேறியுள்ளது. வருகிற ஜூன் மாதம் லார்ட்ஸில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலியா மோத உள்ளது.